உலகம்

சென்னையில் கனமழை; விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

11/12/2024 08:56 PM

சென்னை, 11 டிசம்பர் (பெர்னாமா) --  வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்திருப்பதால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால், தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் மீண்டும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையானது கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வானம் சற்று தெளிவான பின்பு அனைத்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின

அதோடு, சென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை ஆகியவை அதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன.

இதையடுத்து சென்னையிலிருந்து யாழ்பாணம், கொச்சி, மதுரை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கான இருவழிப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

-- பெர்னாமா 


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)