விளையாட்டு

சொந்த அரங்கில் மென்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி தோல்வி

16/12/2024 05:55 PM

லண்டன், 16 டிசம்பர் (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், மென்செஸ்டர் யுனைடெட் 2-1 என்ற கோல்களில் மென்செஸ்டர் சிட்டியைத் தோற்கடித்தது.

ஆட்டத்தின் பிற்பகுதியில், மென்செஸ்டர் யுனைடெட் அடித்த இரு கோல்கள், நடப்பு வெற்றியாளரான சிட்டியை அதிர்ச்சி தோல்வியடையச் செய்தது.

நேற்று பின்னிரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், சொந்த அரங்கில் விளையாடிய மென்செஸ்டர் சிட்டி தனது முதல் கோலை 36-வது நிமிடத்தில் ஜோஸ்கோ ஜிவர்டியல் வழி அடித்தது.

அந்த ஒரே கோலுடன், முதல் பாதி ஆட்டம் சிட்டிக்கு சாதகமாய் முடிந்தது.

பின்னர், இரண்டாம் பாதியை வெற்றிக்கொள்ள இரு கிளப்களும் மாறி மாறி முயற்சித்தன.

அதில், 88-வது நிமிடத்தில், மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கான கோலை புருனோ ஃபெர்னாண்டஸ் பெனால்டி வழி அடித்து 1-1 என்று ஆட்டத்தை சமன் செய்தார்.

அதனை அடுத்த இரு நிமிடங்களில், அவ்வணியின் இரண்டாவது கோலை அமாட் டியாலோ அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்பருவத்தில் இது மென்செஸ்டர் சிட்டிக்கு ஐந்தாவது தோல்வியாகும்.

பட்டியலில், 27 புள்ளிகளுடன் சிட்டி ஐந்தாவது இடத்தில் இருக்கும் வேளையில், 22 புள்ளிகளுடன் மென்செஸ்டர் யுனைடெட் 13-வது இடத்தில் உள்ளது. 


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)