பேங்காக் , 31 டிசம்பர் (பெர்னாமா) - 2024 ஆசியான் கிண்ண காற்பந்து போட்டிக்கான இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டம்.
சொந்த அரங்கில் விளையாடியதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாய்லாந்து, பிலிப்பைன்சை 3-1 என்ற கோல்களில் தோற்கடித்தது.
இந்த வெற்றியின் வழி 4-3 என்ற மொத்த கோல்களின் எண்ணிக்கையில் தாய்லாந்து இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியது.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-2 என்ற கோல்களில் தோல்வி கண்டிருந்த தாய்லாந்து, நேற்றிரவு, பேங்காக் ராஜாமங்களா தேசிய அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தைத் தனது சொந்த ரசிகர்களின் முன்னிலையில் விறுவிறுப்பாக ஆரம்பித்தது.
37வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னணி வகிக்க தொடங்கிய தாய்லாந்து,
54வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது பிலிப்பைன்சை பின்னுக்குத் தள்ளியது.
இருப்பினும், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் பிலிப்பைன்ஸ் ஒரு கோலை அடித்ததால் இரு குழுக்களுமே மொத்த கோல்கள் எண்ணிக்கையில் சமநிலை கண்டன.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் கூடுதல் நேரத்தில் சுபநாத் தமது அணிக்கான வெற்றி கோலை அடித்ததால் இறுதி ஆட்டத்திற்கான நுழைவுச் சீட்டைத் தாய்லாந்து பெற்றுக் கொண்டது.
இறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வியட்நாமுடன் மோதவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)