Ad Banner
Ad Banner
 பொது

தேசிய தினம் & மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கான சுமூகமான ஏற்பாடுகள்

07/08/2025 04:48 PM

கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2025 தேசிய தினம் மற்றும் மலேசிய தினம், எச்.கே.எச்.எம் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்துகொள்பவர்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதற்காக இரு முக்கிய செயற்குழு கூட்டங்களை தமது அமைச்சு நடத்தியதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். 

''அனைத்தும் நல்லபடியாகவும் சுமுகமாகவும் நடக்கும். திட்டமிடல் மற்றும் பங்கேற்பைப் பொறுத்தவரை, அணிவகுப்பில் பங்கேற்க பல்வேறு தரப்பினரிடமிருந்து அமைச்சு இன்னும் விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது,'' என்றார் அவர். 

தேசிய மற்றும் மலேசிய தினம் எச்.கே.எச்.எம் 2025 உடன், PENTARAMA Homecoming மற்றும் PENTARAMA X Kelab Malaysiaku நிகழ்ச்சியை இன்று பங்சார் தேசியப் பள்ளியில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் DATUK FAHMI அவ்வாறு கூறினார்.

தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை அமைச்சு திட்டமிட்டு வருகிறது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]