கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி வரையிலான காலகட்டத்தில் சட்டத்தை மீறியதற்காக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய உள்ளடக்கங்கள், அச்சேவை வழங்குநர்களால் அகற்றப்பட்டதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
''2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் 1 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 321,012 சூதாட்டம் தொடர்பான வழக்குகள் மற்றும் 119,273 மோசடி உள்ளடக்கம், 43,585 ஆபாச உள்ளடக்கம், 35,420 கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தல் வழக்குகள் மற்றும் 38,818 போலி உள்ளடக்கம் ஆகியவை எம்.சி.எம்.சி-இன் விண்ணப்பத்தைத் தொடர்ந்து அச்சேவை வழங்குநர்களால் அவை அகற்றப்பட்டன,'' என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட அந்த அனைத்து உள்ளடக்கங்களும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 588-இன் கீழ் சட்டங்கள் மற்றும் தள வழங்குநரின் சமூக வழிகாட்டுதல்களை மீறியுள்ளதால் அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தியோ கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]