Ad Banner
Ad Banner
 பொது

விளையாட்டு மைய ஊழியர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்

07/04/2026 05:47 PM

ஈப்போ, 07 ஏப்ரல் (பெர்னாமா) -- பேராக் தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைய ஊழியர் ஒருவர் இன்று அதிகாலை அந்த மையத்தின் உபகரணங்கள் சேமிப்பு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பின்னிரவு மணி 1.57-க்கு தகவல் கிடைத்ததாகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.

பூட்டப்பட்ட அறையில் சிக்கிக்கொண்ட அந்த ஆடவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக, சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதை, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேல் நடவடிக்கைக்காக 53 வயதான முஹமாட் ரட்சி அரிஃபின் எனும் ஆடவரின் சடலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)