கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளின் மூலம், தேசிய சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பது தொடர்பிலான கழகச் சீர்திருத்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.
அரசு தரப்பு வழக்கறிஞர்களின் நியமனம், பணிநீக்கம் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புத் தேர்வு செயற்குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாக சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
நாட்டின் நீதி அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் அனைத்துக் கருத்துகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தக் கலந்துரையாடல் அமர்வு தொடரும் என்று டத்தோ ஶ்ரீ அசாலினா கூறினார்.
அந்த அமைப்பை மேலும் வெளிப்படையானதாகவும் நேர்மையானதாகவும் மாற்றுவதற்கான சீர்திருத்த முயற்சிகளைத் தொடர்வதே தேசிய சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் பொறுப்புகளைப் பிரிப்பது தொடர்பான ஜே.கே.பி.கே கூட்டத்தின் நோக்கமாகும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]