Ad Banner
 பொது

உபரி எரிப்பொருள்களில் மலேசியாவிற்கே முன்னுரிமை - அன்வார்

16/04/2026 05:33 PM

புத்ராஜெயா, 16 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆஸ்திரேலியாவிற்கு உபரி எரிப்பொருள்களை வழங்குவதற்கு முன்னதாக உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே மலேசிய முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

உள்ளூர் தேவைகளுக்குப் போதுமான விநியோகம் செய்யப்படும் என்றும், மீதமுள்ளவை ஆஸ்திரேலியா போன்ற நம்பகமான பங்காளிகளுக்கு அனுப்பப்படும் என பெட்ரோநாஸ் நிறுவனம்  அரசாங்கத்திற்கு உறுதி அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"ஆஸ்திரேலியாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். ஏனென்றால் இது உண்மையாகவே இருக்கலாம். அதாவது இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பரிமாற்றத்தில் நாம் மற்ற நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று கூறுவது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகும். அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. முன்னுரிமை, நிச்சயமாக உள்நாட்டுத் தேவைகள், நாட்டின் பொருளாதார மீள்திறன். ஆனால், இதுபோன்ற பேச்சுவார்த்தைகள், நண்பர்களுக்கு இடையிலான சந்திப்புகள் மிகவும் முக்கியமானது," என்றார் அவர். 

இரு நாடுகளும் மூலோபாய வளங்களுக்காக ஒன்றோடு ஒன்று சார்ந்திருப்பதால், இத்தகைய முயற்சிகள் நட்பு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் வியூக புரிதலின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]