Ad Banner
Ad Banner
Ad Banner
 

சிறு அளவிலான மோட்டார் வாகனப் பரிசோதனை மையங்கள்; பரிசோதிக்கும் செயல்முறை எளிதாகும்

26/05/2026 05:31 PM

காஜாங், 26 மே (பெர்னாமா) -- சமூகப் பகுதிகளில் அரசாங்கம் சிறு அளவிலான மோட்டார் வாகனப் பரிசோதனை மையங்களை அறிமுகப்படுத்தும் போது தனிநபர் வாகனங்களின் உரிமை மாற்றத்தைப் பரிசோதிக்கும் செயல்முறை எளிதாகும்.

புஸ்பாகோமின் 30 ஆண்டுக் கால குத்தகை முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் மற்ற தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

''அதே வேளையில், சாலையைப் பயன்படுத்துபவர்கள், எம்.ஓ.டி மற்றும் ஜே.பி.ஜே ஆகியவற்றின் அவசியம் மற்றும் பாதுகாப்பிற்காக நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்புத் தரநிலைகள், தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் நேர்மை நிலைகள் ஆகியவற்றை அனைத்து பிபிகேஎம் நிர்வகிப்பாளர்களும் கடைப்பிடிப்பதை எம்.ஓ.டி மற்றும் ஜேபிஜே தொடர்ந்து உறுதி செய்யும்,'' என்று அவர் கூறினார்.

இன்று, செவ்வாய்க்கிழமை காஜாங்கில், காரோ டெக்னாலிஜி Carro Technology நிறுவனத்தால் தனிநபருக்குச் சொந்தமான மோட்டார் வாகன உரிமை மாற்றப் பரிசோதனை மையத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்தோணி லோக் அவ்வாறு கூறினார்.

தொடக்கக்கட்டமாக, எட்டு காரோ சோதனை மையங்கள் ஜூன் 16ஆம் தேதி ஏககாலத்தில் செயல்படத் தொடங்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)