லெம்பா பந்தாய், 27 மே (பெர்னாமா) -- நிலுவையில் உள்ள விளையாட்டாளர்களின் ஊதியம் உட்பட கே.எல். சிட்டி எஃப்.சி-இன் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
கே.எல். சிட்டி எஃப்.சி-இன் ஆதரவாளராகத் தாம் நியமிக்கப்பட்டதில் இருந்து அக்கிளப்பின் நிர்வாகத்தில் ஏற்பட்ட மேம்பாடுகளின் காரணமாக முன்னதாக எழுந்த பல பிரச்சனைகள் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் கையாளப்பட்டதாக டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
வரும் காலங்களில் அதே பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்கும் முயற்சியாக, நிதி மேம்பாடு மற்றும் நிர்வாகத்தின் அம்சங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
''சில விவகாரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் நம்புகிறோம் நிதி பிரச்சனை மீண்டும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்காது. உரிமம் வழங்குவதில் எந்தவொரு தடைகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இன்னும் சில விவகாரங்களைக் கவனித்துக் கொள்வோம்,'' என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்
உரிம விதிமுறைகள் பிரிவு 8(f)-இன் கீழ் மலேசிய கால்பந்து லீக், கே.எல். சிட்டி எஃப்.சி மற்றும் மற்றொரு விளையாட்டு கழகத்திற்கு தலா 45,000 ரிங்கிட் அபராதம் விதித்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நேற்று நடைபெற்ற மலேசிய கால்பந்து லீக்கின் உரிமம் வழங்கும் முதல்நிலை குழுக் கூட்டத்திற்குப் பின்னர், அம்முடிவு எடுக்கப்பட்டதாக ஃபஹ்மி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)