Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் தேர்தல்: பி.எச் வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்வார்

21/06/2026 04:25 PM

கோலாலம்பூர், 21 ஜூன் (பெர்னாமா) -- ஜோகூர், தங்காக், புக்கிட் கம்பிரில் நாளை நடைபெறவுள்ள மாநில தேர்தலின்  நம்பிக்கை கூட்டணி, பி.எச் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொள்ளவிருக்கிறார்.

மக்களின் நம்பிக்கையையும் பொறுப்பையும் ஏற்று, மாநிலத் தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதற்காக, பி.எச் தலைமைத்துவத்துடன்  தாம் கலந்துகொள்வதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

வெற்றியை நோக்கிய முதல் படியாகக் கருத்தப்படும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

தங்காக், புக்கிட் கம்பிர் எக்ஸ்டிரிம் பார்க் திடலில் இரவு மணி எட்டுக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

ஜூலை 11-ஆம் தேதி ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் வேளையில், வேட்புமனுத் தாக்கல் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம், SPR அறிவித்தது. 

அதோடு, முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை ஏழாம் தேதி நடைபெறும்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]